திராவிட மாடல் என்பது இந்திய மாடலின் ஓர் அங்கம் தான்- வானதி சீனிவாசன்

 
vanathi srinivasan

திராவிட மாடல் என்பது இந்திய மாடலின் ஓர் அங்கம் தான் என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச் செய்யவில்லை: வானதி  சீனிவாசன் | Vanathi Srinivasan slams DMK - hindutamil.in

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பேசியதற்கு நன்றி தெரிவித்து பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், திமுக அரசின் ஓராண்டு நிறைவுக்கு பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சியையும் இந்தியாவின் வளர்ச்சியாக பார்க்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கேற்ப தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு பாஜக தனது ஒத்துழைப்பைத் தருகிறது. அதை வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பாஜக எடுக்கும் எனக் கூறினார்.

தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு பிரதமரும், மத்திய அரசும் வழங்கிய திட்டங்கள் பற்றி வானதி சீனிவாசன் பேச முற்பட்ட போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அவை மாண்புக்கு உட்பட்டு 110 விதியின் கீழ் விவாதம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், நன்றி தெரிவித்து மட்டும் பேசுமாறும், மத்திய அரசு பற்றி பேச 9-ம் தேதி வாய்ப்பு தருவதாகவும் கூறினார்.

பின்னர் பேச்சைத் தொடர்ந்த வானதி, திராவிட மாடல் என்ற வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்துவதாகவும், திராவிட மாடல் என்றால் அது தமிழ்நாடு உட்பட ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் உள்ளடக்கியது தான் என்றும், திராவிட மாடல் என்பது இந்திய மாடலின் ஓர் அங்கம் தான் என்றும் கூறினார்.