கலைகளில் மரணமே இல்லாதவனின் ஜனன நாள் - கமலுக்கு வைரமுத்து, பார்த்திபன் வாழ்த்து

 
vp

உலகநாயகன் #Ulaganayagan கமல்ஹாசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடிகர் பார்த்திபன் அவருக்கு நேரில் பிறந்தநாள் பரிசு கொடுத்திருக்கிறார்.  அதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார். கவிஞர் வைரமுத்து கமல்ஹாசனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

vi

முற்பகுதியைப் போலவே
வாழ்வின் பிற்பகுதியிலும்
பேருழைப்பு நல்குவது
எல்லார்க்கும் வாய்ப்பதில்லை

வாய்த்திருக்கும்
திரு கமல்ஹாசனை
வாழ்த்துவோம்

உடலை நலமும்
வாழ்வை வளமும்
சூழ்க; வாழ்க!
- என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் வைரமுத்து.

கலைகளில் மரணமே இல்லாதவனின் ஜனன நாள் வாழ்த்துகள்!  என்று பதிவிட்டிருக்கும் பார்த்திபன்,


 “நீங்க படிக்க நான் சில புத்தகம் தருவதிலிருந்தே நீங்க புரிஞ்சிக்கலாம், நான் இன்னும் உங்களை முழுசா படிச்சி முடிக்கலன்னு!”சொல்லிக் கொடுத்தேன்.
அள்ளிக்கொடுத்தார் அன்பை! என்றும் பதிவிட்டிருக்கிறார்.