ஈபிஎஸ் தலைமையிலான அணியே உண்மையான அதிமுக; மற்றவையெல்லாம் புழு- வைகை செல்வன்

 
vaigai selvan

எடப்பாடி தலைமையில் இயங்கும் அணி தான் உண்மையான அதிமுக மற்றவைகள் எல்லாம், குழுவாகவும் புழுவாகவும் தான் உள்ளன என முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைசெல்வன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணாசிலை அருகில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைசெல்வன் பங்கேற்றார். 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் செய்தி தொடர்பாளருமான வைகை செல்வன், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும். அணி தான் உண்மையான அதிமுக மற்றவைகள் எல்லாம் குழுவாகவும் புழுவாகவும்தான் உள்ளன. அதிமுக தலைமையில் தான் தேர்தல் களம் சந்தித்துள்ளன. ஈரோடு இடைதேர்தலில் எடப்பாடி அதிமுக அணி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும். இன்னும் 1வார காலங்களில் நிச்சியமாக கோர்ட் தீர்ப்பு எடப்பாடிக்கு
சாதகமாக வரும். ஓ.பி.எஸ் பி.ஜே.பிக்கு ஆதரவு தருவது என்பது
கற்பனையானது. அதிமுக தலைமையில் தான் பி.ஜே.பி மற்றும் ஏனைய கட்சிகள் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் களம் கண்டது. 

தலைமை பொறுப்பில் உள்ள கட்சி அதிமுக கூட்டணி கட்சிகளை அரவணைத்து துணையாக தேர்தல் களத்தில் அதிமுக போட்டியிடும்” என தெரிவித்தார்.