நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

 
m.k.stalin

நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn
நகைச்சுவை  நடிகர் வடிவேலுவின் தாயார் உடல்நலக்குறைவால் நேற்று இரவு மதுரை வீரகனுரில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.  அவருக்கு வயது 87. நடிகர் வடிவேலுவின் தாயார் உயிரிழந்ததை தொடர்ந்து அவருக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆறுதலையும்,  இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

rajinikanth and cm stalin

இந்நிலையில் நடிகர் வடிவேலு  தாயார் திருமதி. சரோஜினி அம்மாள்  மறைவையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில், "நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாதஇழப்பாகும். 'வைகைப் புயல்' திரு. வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.