பார்வையற்ற ஜோடிக்கு திருமணம் ... ரூ.1 லட்சம் ரொக்கம், சீர்வரிசை என அசத்திய வடபழனி போலீஸார்..

 
 பார்வையற்ற ஜோடிக்கு திருமணம் ...  ரூ.1 லட்சம் ரொக்கம், சீர்வரிசை என அசத்திய வடபழனி போலீஸார்..

பார்வையற்ற காதலர்களுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசையுடன் திருமணம் செய்து வைத்த வடபழனி போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன..

ஜோலார்பேட்டையைச் சேர்ந்த கூலித்  தொழிலாளியின் மகன் பாலு. பிறவியிலிருந்தே பார்வை குறைபாடு உடைய பாலு, எம்.ஏ., பி.எட்.,  படித்த பட்டதாரி. பாலுவுக்கு கல்லூரி படிப்பு காலத்திலிருந்தே,  இன்ஸ்பெக்டராக இருந்த ஆனந்த்பாபுவுடன் பழக்கம் கிடைத்துள்ளது. உறவினரோ, நண்பரோ இல்லை என்றாலும் இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு,  பாலுவுக்கு சகோதரர் போல் நிறைய உதவிகள் செய்து வந்துள்ளார்.   இந்நிலையில் பாலு கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்ற போது, அங்கு  தமிழரசி என்கிற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

 பார்வையற்ற ஜோடிக்கு திருமணம் ...  ரூ.1 லட்சம் ரொக்கம், சீர்வரிசை என அசத்திய வடபழனி போலீஸார்..

தமிழரசியும் பார்வை குறைபாடு உடையவர் ஆவார். இருவருக்குமான நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பாலுவின் தந்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதேபோல தமிழரசியின் குடும்பமும் ஏழ்மை நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் திருமணம் குறித்து முடிவு செய்த பாலு -  தமிழரசி ஜோடி,  இது குறித்து இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபுவிடம் தெரிவித்திருக்கின்றனர். அப்போது நான் இருக்கிறேன் என நம்பிக்கை வார்த்தை கூறிய ஆனந்த்பாபு, சொன்னது போலவே திருமணத்தை செய்து முடித்து செலவுகள்  அனைத்தையும் அவரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.  தற்போது வடபழனி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் அவர் , காவல் நிலையம் சார்பாக ரூ. 1 லட்சம் ரூபாய் கொடுத்து திருமண செலவுகளையும் செய்து அனைவருமாக வாழ்த்தி இருக்கின்றனர்.

 பார்வையற்ற ஜோடிக்கு திருமணம் ...  ரூ.1 லட்சம் ரொக்கம், சீர்வரிசை என அசத்திய வடபழனி போலீஸார்..

மேலும், பாலு -  தமிழரசியின் திருமணத்திற்கு  வடபழனி ஏசி பாலமுருகன் தலைமையில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும்,  நாமக்கல் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் 25 ஆயிரம் ரூபாய் , டெக்ஸ்ட் ஷாப் சார்பில் 25 ரூபாயும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதாகவும் இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு கூறுகிறார். அத்துடன் பாலு தமிழரசியின் திருமணத்திற்காக லயன்ஸ் கிளப்பிடம் உதவி கோரிய போது  அதன் தலைவர் அசோக்,   பீரோ,  கட்டில்,  கிரைண்டர்,  மிக்ஸி என அனைத்து சீர்வரிசை பொருட்களையும் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும்,  காவல் நிலைய நண்பர்கள் சார்பாக ரூ. 1  லட்சம்  ஏற்பாடு செய்து புதுமண தம்பதிக்கு கொடுத்து உதவியதாகவும் கூறி நெகிழ்ச்சியை  ஏற்படுத்தி இருக்கிறார். இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு மற்றும் வடபழனி காவல் நிலைய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன..