வ.உ.சி நினைவு நாள் : தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை..

 
V. O. Chidambaram Pillai

விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாரின்   86வது நினைவு நாளையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

V. O. Chidambaram Pillai

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.   இதனையொட்டி சென்னை துறைமுகத்தில் உள்ள அவரது சிலைக்கு  கீழ் உருவப்படம் வைக்கப்பட்டு  அலங்காரிக்கப்பட்டுள்ளது. அவரது திருவுருவபடத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.  மேலும் சென்னை துறைமுக பொறுப்பு கழகம் சார்பிலும் அவரது திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி  மரியாதை செலுத்தப்பட்டது.

V. O. Chidambaram Pillai

தமிழக அரசு சார்பில், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் சுவாமிநாதன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்,  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று வ.உ.சி-யின் உருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.  அதேபோல சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் சார்பில்,  துறைமுக பொறுப்பு கழக இயக்குனர் மற்றும் சென்னை துறைமுக பொறுப்புக் கழக அதிகாரிகளும் வ.உ.சி-யின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.