மிகுந்த துயரத்தையும், வேதனையையும் அளிக்கிறது.. - சசிகலா..

 
SASIKALA

வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தவர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனை அளிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

 மிகுந்த துயரத்தையும், வேதனையையும்  அளிக்கிறது.. - சசிகலா..

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில்  ஆக்கிரமிப்புகள் அகற்ற எதிர்ப்பு  தெரிவித்து  கண்ணையா என்பவர் நேற்று தீக்குளித்தார். இந்நிலையில்  இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு  பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,  சசிகலாவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  “சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தவர் உயிரிழந்தார் என்று செய்தி மிகவும் வேதனையையும், துயரத்தையும் அளிக்கிறது.

சசிகலா

தமிழக ஆட்சியாளர்கள் நீதிமன்றத்தை காரணம் காட்டி குடியிருப்புகளை அப்புறப்படுத்தும்போது, அங்கு குடியிருப்பவர்களிடம் முன் கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு தகுதியான மாற்று இடத்தை வழங்கியபின் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு இருந்தால் இந்த உயிரிழப்பையே தவிர்த்து இருக்கலாம். தமிழக ஆட்சியாளர்கள் சரியாக இந்த செயலை அனுகாததால் தான் இன்று ஒரு உயிர் பலி ஆகியிருக்கிறது. உயிரிழந்த கண்ணையா அவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.