தமிழக மக்களுக்கு சசிகலா மே தின வாழ்த்து

 
sasikala


மே தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு சசிகலா மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 சசிகலா தனது வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் பறைசாற்றும் நாளாக கொண்டாடப்படுகின்ற இந்த 'மே தின' நன்னாளில் உலகெங்கிலும் வாழும் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "மே தின" நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த உலகம் உழைப்பவர்களால் மட்டுமே இயங்கிக்கொண்டு இருக்கிறது. உடலினை இயந்திரமாக்கி, உதிரத்தை வியர்வையாக சிந்தி, மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய தொழிலாளர்கள், எட்டு மணி நேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய' உரிமையாக போராடிப் பெற்ற நாளே தொழிலாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 

sasikala

உழைப்பாளர்களுக்குள் ஏற்ற, தாழ்வு இல்லை; அவர்களிடையே வேறுபாடு இல்லை; உழைப்போர் அனைவரும் சரிநிகர் சமமானவர்களே இதைத் தான் புரட்சித் தலைவர் அவர்கள், ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே! உழைக்கும் மக்கள் யாவரும், ஒருவர் பெற்ற மக்களே!"என்று உழைப்பின் மாண்பினையும், உழைப்பாளர்களின் பெருமையையும் பாடல்களின் மூலம் வெளிப்படுத்தினார். நம் அம்மா அவர்களும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்தார்.நாட்டின் வளர்ச்சிக்காகவும்.. பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்திடும் தொழிலாளர்கள், எல்லா வளங்களும், நலன்களும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி எனதருமை தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.