திண்டுக்கல்லில் பரவும் உன்னி காய்ச்சல்! மனித உயிர்கள் பலியாகும் கொடுமை

 
உன்னி காய்ச்சல்

திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உன்னி காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு ஒருவர் பலியாகியுள்ளார்.

death

திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது உன்னி காய்ச்சல் பரவி வருகிறது. திண்டுக்கல் கூட்டுறவு நகர் அருகே உள்ள காந்திஜி நகர் முதல் தெருவில் உள்ள ஒருவர் உன்னி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதேபோல் மேட்டுப்பட்டி முருகன் கோவில் அருகே ஒரு பெண் உன்னி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்பொழுது திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் ஐந்து பேர் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த உன்னி காய்ச்சல் கண்ணுக்குத் தெரியாத சிறிய பூச்சியின் மூலமாக பரவி வருகிறது. மண் தரையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த நோய் எளிதில் தாக்கக்கூடிய தன்மை உள்ளதாகும். உடம்பில் ஏதேனும் ஒரு இடத்தில் சின்னதாக கொப்பளம் அல்லது புண்ணாக வந்து அதனைத் தொடர்ந்து காய்ச்சலாக மாறி மனிதர்களை பாதிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை சுகாதாரத்துறை சேர்ந்தவர்கள் சுத்தம் செய்து சுண்ணாம்பு பவுடர்களை தெளித்து வருகின்றனர். மேலும் உன்னி காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள வீட்டில் உள்ளவர்களுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சுகாதாரத் துறையினர் வழங்கி வருகின்றனர்.