நானும் கிறிஸ்தவன் தான்- உதயநிதி ஸ்டாலின்

 
red giant udhayanidhi stalin

சென்னை துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். 

Udhayanidhi Stalin to be sworn in as TN minister on Dec 14

அப்போது பேசிய அவர், “திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன? சொல்றேன் கேளுங்க.. ஒரு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ’அல்லேலுயா’ என சொல்லி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எப்போதுமே மாலையும் கழுத்துடன் தான் இருப்பார் ஆனால் அவர் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார். இதுதான் சமூக நிதி ஆட்சி. இதுதான் பெரியார், கலைஞர் கற்றுக்கொடுத்தது. அந்த ஆட்சியைதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான். கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். சேகர்பாபு  அல்லேலுயானு சொல்றாரு. உதயநிதி ஸ்டாலின் போய்ட்டு கிறிஸ்தவனு சொல்றாருனு இன்று எல்லா சங்கிகளுக்கும் எரியும். நான் எழும்பூரில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில்தான் படித்தேன். லயோலா கல்லூரியில்தான் படித்தேன். நான் காதலித்து மனந்தது ஒரு கிறிஸ்தவ மகிழ்ச்சி. கடந்த 4 நாட்களாக பத்திரிக்கையாளர்களுக்கு நான் தான் தீனியாகி கொண்டிருக்கிறேன். முதலில் அமைச்சர் பொறுப்பு கொடுக்கும்போது எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால் என்னை வழிநடத்த அமைச்சர் சேகர்பாபு போன்ற பல அண்ணன்கள் அமைச்சரவையில் இருப்பதால் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்” என தெரிவித்தார்.