மீண்டும் திமுக இளைஞரணி செயலாளர் பதவி - அப்பாவிடம் வாழ்த்து பெற்ற மகன்

 
udhayanidhi stalin

திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் தேர்வான சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வீட்டில் முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன். திமுக இளைஞரணியை 40 ஆண்டுகள் வளர்த்தெடுத்து வலுப்படுத்திய மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றது பெருமையாக உள்ளதாக கூறினார்.

திமுகவில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில இளைஞர் அணி செயலாளர், துணை செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள், பிரச்சாரக்குழு செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஆலோசனைக்குழு நியமனம் உள்ளிட்டவற்றை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். அதன்படி திமுகவின், இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் இளைஞரணி துணை செயலாளர்களாக, எஸ்.ஜோயல், ந, ரகுபதி, நா.இளையராஜா உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.