மதுரையில் மு.க.அழகிரியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
Mon, 16 Jan 20231673885959786

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரையில் உள்ள அவரது பெரியப்பாவும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை சந்தித்தார்.
நாளை அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான மு.க.அழகிரி சந்தித்தார்.
முக அழகிரியின் வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரியிடம் அமைச்சர் உதயநிதி சந்திக்க வருகிறாரா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பெரியப்பாவை பார்க்க தம்பி மகன் வருகிறார் என மு.க. அழகிரி பதில் அளித்தார்.