அண்ணாமலை - உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு

 
Udhayanithi annamalai

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஒன்றாக சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தருமான ஐசரி கணேசின் தாயார் புஷ்பா நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கபட்டிருந்தது. அவரது உடலுக்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புஷ்பாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு சென்ற நிலையில், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் அங்கு வந்திருந்தார். 

இருவரும் புஷ்பாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் இருவரும் ஐசரி கணேசிடம் ஆறுதல் தெரிவித்ததோடு, சிறிது நேரம் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டனர். அப்போது, கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள, முதலமைச்சர் ஸ்டாலின் உடல் நலன் குறித்து அண்ணாமலை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ஐசரி கணேஷ்,  கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.