ராகிங்கை தடுக்க சிசிடிவி கட்டாயம் - பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்..

 
cctv

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ராகிங்கை தடுக்க  கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

2022- 23ம் கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது.  அதில்,

  •  “ ராகிங்கை தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.
  •  ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்துவதுடன் முக்கிய இடங்களில் எச்சரிக்கை மணியையும் பொருத்த வேண்டும்.
  •   விடுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

college reopen

  •  விடுதிகள், உணவகங்கள், கழிவறைகளில் ராகிங் தடுப்பு குறித்து விழிப்புணர்வு போஸ்டர்களை ஒட்ட வேண்டும்.
  •  ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என ஒவ்வொரு மாணவரும் www.antiragging.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  •   ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த கல்லுரி, பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
  •  சீனியர் மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு படிக்க வரும், புதுமுக மாணவர்களை சகோதர உணர்வுடனும், பரஸ்பரத்துடனும் வரவேற்க வேண்டும். தொடர்ந்து, இயல்பான நிலையிலேயே பழக வேண்டும். ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக உள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.