இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்தது-இளம்பெண் பலி

 
well

கோவையில் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றின் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கிணற்றுக்குள் விழுந்து இளம் பெண் உயிரிழந்தார்.

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மரணம்!! - Tamilarul.Net - 24மணி நேரச்  செய்திகள்

 
கோவை சூலூர் பச்சார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து, இவரது மனைவி தமிழ்செல்வி, இவர்களுக்கு திருமணம் ஆகி சபிதா (18) என்ற மகளும், சந்தோஷ் (12) என்ற மகனும் உள்ளனர். மேலும் நாச்சிமுத்து தேங்காய் லோடு ஏற்றும் வேலை செய்து வருகிறார். தமிழ்செல்வி மற்றும் அவரது மகள் சபிதா இருவரும் சுல்தான்பேட்டையில் உள்ள சுரேஷ் என்பவரது தேங்காய் மண்டியில் தேங்காய் உடைக்கும் வேலை செய்து வந்தனர். மேலும் தமிழ்செல்வி, சபிதா இருவரும் வழக்கமாக தங்களது இரு சக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து வேலைக்குச் சென்று வந்தனர். 

இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் வழக்கம் போல தமிழ்செல்வியும் மகள் சபிதாவும் இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்றுள்ளனர். அப்போது சபிதா வாகனத்தை ஓட்டியுள்ளார். அப்போது பச்சார்பாளையம் – பொள்ளாச்சி, பல்லடம் மெயின் ரோட்டில் வந்துள்ளனர். நல்லதண்ணீர் தோட்டம் அருகே வந்த போது அங்கிருந்த வளைவில் திரும்பியுள்ளனர். வேகமாக வந்ததாக பின்னால் அமர்ந்திருந்த தமிழ்செல்வி நிலைதடுமாறி கிழே விழுந்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் அங்கிருந்த கிணற்றின் சுவர் மீது மோதி சபிதா அங்கிருந்த 80 அடி கிணற்றிக்குள் தூக்கி வீசப்பட்டார். 

இதையடுத்து தமிழ்ச்செல்வி சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் வந்து பார்த்த போது கிணற்றிற்குள் சபிதா விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து சுல்தான் பேட்டை போலீஸ் மற்றும் சூலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி கிணற்றில் சடலமாக இருந்த சபிதா உடலை மீட்டனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக சுல்தான்பேட்டை போலீஸார் வழக்கு பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.