பாலியல் புகாரில் தேடப்படும் இரண்டு பாதிரியார்கள்

 
னெ

இளம் பெண்ணின் பாலியல் புகாரில் இரண்டு  பாதிரியார்களை போலீசார் தேடி வருகின்றனர் .

திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி அடுத்த கலந்தப்பனை சீயோன் புரத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் டேவிட் ராஜ் .  இவரின் மகன் அனீஸ் பவுல்(25).  இவரும் பாதிரியாராக உள்ளார்.

 அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண் கிறிஸ்தவ பெண் இந்த கிறிஸ்தவ சபைக்கு அடிக்கடி வந்து சென்றிருக்கிறார்.   அப்போது அனீஸ் பவுலுக்கும் அந்தப் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.    திருமணம் செய்து கொள்வதாக சொல்லி அந்த பெண்ணுடன்  நெருங்கிப் பழகி வந்திருக்கிறார் அனீஸ் பவுல்.  

கி

ரொம்ப  நெருக்கமாக பழகி வந்தபோது ஆசை வார்த்தைகள் சொல்லி மயக்கி பாலியல் உறவு வைத்திருக்கிறார் பாதிரியார் அனீஸ் பவுல்.   தொடர்ந்து இப்படி பாலியல் உறவு  வைத்திருப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார் அனீஸ் பவுல்.  

ஒருகட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளச்சொல்லி அந்த பெண் கேட்டிருக்கிறார்.  அதற்கு  திருமணம் செய்ய மறுத்திருக்கிறார்  அனீஸ் பவுல்.  திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லித்தானே என்னிடம் உறவு வைத்தீர்கள்.  நானும் அதற்கு சம்மதித்தேன்.  இப்போது ஏன் மறுக்கிறீர்கள் என்று அழுதிருக்கிறார்.   தான் பாதிரியார் என்பதால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். பாதிரியார் டேவிட் ராஜிடம் முறையிட்டபோது அவர் அந்தப்பெண்ணை மிரட்டியிருக்கிறார்.

அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்திருக்கிறார்.  தன்னைப்போல் வேறு யாரும் இப்படி இந்த பாதிரியாரால் ஏமாறக்கூடாது என்று, வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதை அடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின்படி பாதிரியார்கள் டேவிட் ராஜ் , அனீஸ் பவுல் ஆகியோரை வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.
 இந்த பாதிரியார்களுக்கு உதவி செய்த  உறவினரையும் போலீஸ் தேடி வருகின்றனர்.