அரசு பேருந்து விபத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பார்க்க வந்த 2 பேர் பலி!!

நத்தம் கோவில்பட்டியில் அரசு பேருந்தில் நடந்த விபத்தில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து மதுரைக்கு பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று நத்தத்திலிருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது கோவில்பட்டி புளிக்கரை பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஹோட்டலுக்குள் புகுந்தது. இதில் விநாயகர் ஊர்வலத்தை பார்க்க வந்த அப்பகுதியை சேர்ந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
நத்தம் கோவில்பட்டியை சேர்ந்த 59 வயதான தேவராஜ், சிகரம் பட்டியை சேர்ந்த 50 வயதான பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் படுகாயமடைந்த அனைவரையும் ரத்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.