கனியாமூர் கலவரம்- பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக மேலும் இருவர் கைது

 
kallakurichi

கனியாமூர் பள்ளி கலவரத்தின் போது பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

Violence in Tamil Nadu's Kallakurichi over student's suicide, details here  | India News | Zee News

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர்  சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஜூலை 17ஆம் தேதி  நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. அந்த கலவரத்தில்  ஈடுபட்டவர்களை வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து வரும் நிலையில் கலவரத்தின் போது பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டப்பன் மற்றும் செல்வகாசி ஆகிய இருவரை  வீடியோ ஆதாரங்களைக் கொண்டு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட இருவரையும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி முன்பு ஆஜர்படுத்தினர். தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட இருவரையும் 15 நாட்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.