வீட்டின் மேற்கூரை இடிந்து கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழப்பு!!

 
tn

 பழமையான வீடு இடிந்து விழுந்து விபத்து கர்ப்பிணி உள்பட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் 3வது தெருவில் வசித்து வருபவர்கள் முத்துராமன் - காளியம்மன் தம்பதி . இவர்களுக்கு மகள் ஒருவர் இருந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி கணவன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

tn

தற்போது முத்துராமன்- காளியம்மாள் தம்பதி மகள் கார்த்திகா வளைகாப்பு நடத்தப்பட்டு தாய் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.  இந்த சூழலில் எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை  திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.  இந்த விபத்தில் கர்ப்பிணியான கார்த்திகா மற்றும் அவரது தாயார் காளியம்மாள் இடிபாடுகளில் சிக்கினர்.  இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் காளியம்மாள் மற்றும் கார்த்திகா ஆகிய இருவரையும் சடலமாக மீட்டனர். இதை தொடர்ந்து இவரின் உடல்களும்  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Death

50 ஆண்டுகள் பழமையான கான்கிரீட் வீட்டின் மேற்கூரை பகுதியில் பழைய ஓடுகள் ஒட்டப்பட்டு இருந்ததாகவும், தொடர்ந்து ஈரநிலையில் ஓடுகள் இருந்ததால் விபத்து நடந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.