பெரும் சோகம்! சென்னையில் கனமழையால் இருவர் உயிரிழப்பு

 
Rain

சென்னையில் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட இடர்பாடுகளால் இருவர் உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக்நகர், ஈக்காட்டு தாங்கல் சைதாப்பேட்டை கிண்டி, திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது. அதைபோல சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. தாம்பரம் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர். மழை காரணமாக சென்னை மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்து உள்ளது.. மாநகராட்சி பணியாளர்கள் 20,000 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர்.  கனமழையால் 25 இடங்களில் விழுந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மழைக்கு இருவர் உயிரிழந்து உள்ளனர். புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்ததில் சாந்தி என்ற பெண் உயிரிழந்து உள்ளார். வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தேவேந்திரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

.