சென்னையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

 
Death

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகரில் வீட்டின் உறை கிணற்றை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். 

14-year-old boy electrocuted to death in Karnal - Hindustan Times

அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள சரவணன் என்பவரது வீட்டில் உள்ள உறை கிணற்றில் கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வந்துள்ளது.  இதனை சுத்தம் செய்யும் விதமாக சரவணன் கிணறு சுத்தம் செய்யும் தொழிலாளியான நீலாங்கரை சேர்ந்த காளிதாஸ் என்பவரது உதவியுடன் இருவரும் வீட்டின் உரை கிணற்றை சுத்தம் செய்துள்ளனர். சுத்தம் செய்யத்தொடங்கிய சில நிமிடங்களில் காளிதாஸ் மயங்கி உயிரிழந்துள்ளார். மயங்கிய அவரை பார்க்க சென்ற சரவணனும் உறை கிணற்றில் விழுந்து மயங்கி உயிரிழந்துள்ளார். 

மதியம் 2.30 மணிக்கு இருவரும் இறந்துள்ளனர். இவர்களது உடல் 4.30 மணி அளவில் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது. கள்ளுக்குட்டை பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் உறை கிணறு பயன்படுத்துகிறார்கள். இறந்த சரவணன் வீட்டில் உள்ள உறை கிணற்றில் சாக்கடை நீர் கலந்துள்ளதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளதாக அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.