லாரி மோதி விபத்து - 5 பேர் பலி

 
tn

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடுத்தடுத்து தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 2 பெண்கள், 2 குழந்தைகள், ஓட்டுனர் உட்பட 5 பேர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. 

accident

வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரே காரில் பயணித்த 2 பெண்கள், 2 சிறார்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.