மொழிப்போர் தியாகிகளுக்கு 25ம் தேதி அஞ்சலி.. - ஓபிஎஸ்..

 
Ops


மொழிப்போர் தியாகிகளுக்கு 25ம் தேதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம்  தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து  ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்னைத் தமிழுக்காக உயிர் துறந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வருகிற 25-ந் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மொழிப் போர்த் தியாகிகளின் திருவுருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்துமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.