தேவர் குருபூஜை: பசும்பொன் செல்கிறார் ஓபிஎஸ்

தாய்த்திருநாட்டின் விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ன் 115-வது பிறந்தநாள் (ம) 60-வது குருபூஜையையொட்டி 30.10.2022 அன்று அன்னாரது நினைவிடத்தில் அஇஅதிமுக ஓபிஎஸ் மரியாதை செலுத்தவுள்ளார்.
இதுகுறித்து தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்கிற முழக்கத்திற்கு'சொந்தக்காரரும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் தலைமையில் ஆங்கிலேய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையைதிரட்டி அனுப்பிய பெருமைக்குரியவரும், தமிழ் மொழி மீது தீராத பற்றுக் கொண்டிருந்தவரும், ஆங்கிலப் புலமை பெற்றிருந்தவரும், உடல், பொருள், ஆவி எனஅனைத்தையும் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக காணிக்கையாக்கியவரும், குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டவரும்,ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காக ஆலயப் பிரவேசம் நடத்தியவரும், தொழிலாளர்களின் நலன்களுக்காக பாடுபட்டவரும், பத்திரிகை ஆசிரியராக திகழ்ந்தவரும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றியவரும், சமூக நல்லிணக்கத்திற்காக அயராது பாடுபட்டவரும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக பணியாற்றியவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் 145-வது பிறந்த நாள் மற்றும் 60-வது குருபூஜையை முன்னிட்டு 30-10-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 17-30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் நினைவிடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஒ. பன்னீர்செல்வம் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள்.
இந்நிகழ்ச்சியில், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஆர். வைத்திலிங்கம்; கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள். அமைச்சருமான திரு. குப. கிருஷ்ணன்; கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. பிரபாகர்; கழக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. மனோஜ் பாண்டியன்; கழக அமைப்புச் செயலாளரும், திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. வெல்லமண்டி நடராஜன்; கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. சுப்புரத்தினம்; கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. ராமச்சந்திரன்; கழக செய்தித் தொடர்பாளர்கள் திரு. வா. புகழேந்தி மற்றும் திரு. மருது அழகுராஜ்; மக்களவை உறுப்பினரும், தேனி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளருமான திரு. ப. ரவீந்திரநாத்; உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. பி. அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார்கள்.மேற்படி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. ஆர். தர்மர் அவர்கள் மேற்கொள்வார். மேற்படி நிகழ்ச்சியில், அனைத்து தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.