போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன் சஸ்பெண்ட் - தமிழக அரசு உத்தரவு!!

 
tn

லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட  போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

tn

தமிழக போக்குவரத்து துறை சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜன் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம்  14ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது.  இதில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் அவரது வரவு செலவு கணக்கு ஆகியவற்றை குறிப்பிட்ட டைரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.  இதையடுத்து துணை ஆணையர் நடராஜன் மற்றும்அவரது உதவியாளர் ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

tn

 போக்குவரத்துத்துறை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக ரூ. 5 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில் ,நடராஜன் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல். அவர் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 

govt
இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ. 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நெல்லைக்கு மாற்றப்பட்ட நடராஜன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.