இடைநில்லா பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத் துறை எச்சரிக்கை..

 
 இடைநில்லா பேருந்து  ஓட்டுநர், நடத்துனர்களுக்கு  போக்குவரத்துத் துறை எச்சரிக்கை..

 இடைநில்லா (End to End) இயக்கப்படும் பேருந்துகளில் பஸ் பாஸ் வைத்திருக்கும் அனுமதி பெற்ற நபர்களை ஏற்றி/இறக்கி செல்வதில் புகார்கள் பெறப்பட்டால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்  என  போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

 இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இடைநில்லா (END TO END) இயக்கப்படும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளி, கண்பார்வையற்றோர், பத்திரிக்கை, தொலைகாட்சி, அகவைமுதிர்ந்த தமிழறிஞர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ் விருதாளர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குடும்ப பஸ்பாஸ் ஆகிபோருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் பஸ்பாஸ் வழங்கப்பட்டிருந்தால் அவர்களை இடைநில்லா பேருந்துகளில் ஏற்றி/ கிறக்கி செல்ல வேண்டும்.

பேருந்து நடத்துனர்கள் டிக்கெட்

மாற்றுத்திறனாளிகள் கண்பார்வையற்றோர் பயணம் செய்யும் போது அரசால் வழங்கப்பட்டுள்ள நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து நீங்களாக, பிற சேவைகளில்) பயணம் செய்ய அளிக்கப்பட்டுள்ள சலுகையை இடைநில்லாப் பேருந்துகளிலும் சலுகை கட்டணத்துடன் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 இடைநில்லா பேருந்து  ஓட்டுநர், நடத்துனர்களுக்கு  போக்குவரத்துத் துறை எச்சரிக்கை..

மேலும் அரசு கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு, இடைநில்லா பேருந்துகளுக்கு அதற்கான சலுகை கட்டண பயணச்சீட்டு வைத்து வழிவசூல்தாள் வழங்கும்படியும், கிடைநில்லா பேருந்துகளில் பயணம் செய்ய வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அறிவித்துள்ள பயணம் செய்யும் தூரத்திற்கு நான்கில் ஒரு பங்கு கட்டணம் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கவும் இதனை பேருந்து நிலையங்களில் இடைநில்லா பேருந்துகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் நடத்துனர்களுக்கு கிளை மேலாளர் மூலம் அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இது தொடர்பாக எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் பணிபுரிய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இது தொடர்பாக புகார் பெறப்பட்டால் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் ஒழுங்குதடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.