நடத்துநரை தாக்கிய காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!!

 
tn

நடத்துநரை தாக்கிய காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்  செய்யப்பட்டுள்ளார்.

tn

சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் அருகே உள்ள ஜூஸ் கடையில் இன்று காலை ஒருவர் ஜூஸ் குடித்து  கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் கீழே எச்சில் துப்பியதாக தெரிகிறது.  அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் மீது எச்சில் பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரம் அடைந்த காவலர் , அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.  இதில் தாக்கப்பட்ட நபருக்கு முகத்தில் ரத்தம் வழிய தொடங்கியுள்ளது.  இதையடுத்து பொதுமக்கள் காவலரை பிடித்து 100க்கு கால் செய்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  பொதுமக்கள் காயம் பட்ட நபரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இது தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில்,  தாக்குதலுக்குள்ளான நபர் பாலச்சந்திரன் என்பதும் இவர் அயனாவரம் பேருந்து பணிமனையில் நடுவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

tn
பாலச்சந்திரனை தாக்கிய காவலர் லூயிஸ் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் . பாலச்சந்திரன் இன்று காலையில் சர்ச்சுக்கு வந்துள்ளார்.  பின்பு அருகில் உள்ள ஜூஸ் கடையில் ஜூஸ் குடிக்கும் போது தான் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கண்டக்டரை தாக்கிய சைதாப்பேட்டை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் . அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், லூயிஸ் தவறு செய்தது உறுதியானால் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.