புதுச்சேரியில் குடிபோதையில் வந்து நடுரோட்டில் படுத்திருந்த நபரால் போக்குவரத்து நெரிசல்!

 
புதுச்சேரி

குடிபோதையில் நடுரோட்டில் படுத்துக்கொண்டு அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய, குடிமகனின் அலப்பறையால் புதுச்சேரியில்  பரபரப்பு ஏற்பட்டது.


புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே உள்ள உருளையன்பேட்டை காவல் நிலையம் எதிரே குடிமகன் ஒருவர் செம குடிபோதையில் சாலையில் படுத்து கொண்டு ரகளையில் ஈடுபட்டார். அப்போது அந்த குடிமகன் தான் கழுத்தில் அணிந்திருந்த செயினை அறுத்து வீசி நடு ரோட்டில் தகராறு செய்தார். இதனால்  புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கடலூர், விழுப்புரம், செல்லும் பேருந்துகள் ஆங்காங்கே நின்றதால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உருளையன்பேட்டை போலீசார் அந்த குடிமகனை ரோட்டில் இருந்து அப்புறப்படுத்துவதற்குள் படாத பாடுபட்டனர். ஆனால் அவர் திரும்ப, திரும்ப சாலையில் படுக்க முற்படும் போது மீண்டும் அவரை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனை அடுத்து போலீசார் அந்த குடிமகனை ஒரு வழியாக சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.