பெசன்ட் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம்!!

 
tn

பெசன்ட் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

traffic


பெசன்ட் நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 7ஆம் தேதி  அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படும். அன்றைய தினத்தில் அன்னையின் திருத்தேர் கடற்கரை சாலையில் வலம் வருவது வழக்கம். இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

ttn

இந்நிலையில் சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது . இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல எல்.பி. சாலை வழியாக செல்லலாம். திருவிக பாலம் வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையம் செல்ல எல்பி சாலை வழியாக செல்லலாம் மற்றும் எம்ஜி ரோடு சந்திப்பிலிருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் செல்ல அனுமதி இல்லை.  எம்எல் பூங்காவில் இருந்து பெசன்ட் நகர் வழியாக பேருந்து நிலையம் செல்ல மாநகர பேருந்துகளுக்கு அனுமதி இல்லை என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.