விநாயகர் சிலை ஊர்வலம் - சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

 
vinayagar

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுக்குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் , "31.08.202 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காவல் துறை அனுமதி பெற்று பொது இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளில் பெரும்பாலான சிலைகள் ஞாயிற்றுகிழமையன்று (செப்.4) சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலைநகர், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய கடற்கரை ஆகிய இடங்களில் உள்ள கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிலைகளை கரைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில், இன்று விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று மேற்படி 4 இடங்களில் உள்ள கடலில் கரைக்கப்படும் என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் மட்டும் அதற்கேற்ப சில போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.

vinayagar chadurthi

மேலும், இன்று (செப்.4) மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை பெருநகரில் ஈவிஆர் சாலை, ஹாரிங்டன் சாலை, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம் ரோடு, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் ரோடு, நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா ரோட்டரி, கதீட்ரல் ரோடு, ஆர்.கே.சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் ஹைரோடு, டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, திருவொற்றியூர் ரோடு, எம்.எஸ் கோயில் ரோடு, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, பேசின் பாலம், வால்டாக்ஸ் ரோடு, பழைய ஜெயில் ரோடு, ராஜாஜி சாலை, முத்துசாமி பாலம், கொடி மரச்சாலை, காமராஜர் சாலை, வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பு, ECR, OMR, LB ரோடு, தரமணி ரோடு, அண்ணாசாலை, பட் ரோடு, சர்தார் வல்லபாய் படேல் ரோடு மற்றும் சில சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மேற்படி சாலைகளுக்கேற்ப தங்களது பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலை, கச்சேரி சாலை, தெற்கு கெனால் பேங்க் சாலை, வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி செல்லாமல் மாற்றுப் பாதையில் செல்லலாம். அடையாரிலிருந்து பாரிமுனை செல்லும் வாகன ஓட்டிகள், ராமகிருஷ்ணா மட் ரோடு வழியாக மந்தைவெளி, லஸ் கார்னர், ராயப்பேட்டை நெடுஞ்சாலை ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒய்ட்ஸ்ரோடு, ஸ்மித்ரோடு அண்ணாசாலை வழியாக பாரிமுனை சென்றடையலாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.