ஜன.8-ம் தேதி மராத்தான் ஓட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

 
omr

மராத்தான் ஓட்டத்தை முன்னிட்டு வரும் 8ம் தேதி ஞாயிறு அன்று, பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பழைய மகாபலிபுரம் சாலையில்! ~ பழைய பேப்பர்

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை Runners மராத்தான் நெடுந்தூர ஓட்டக் குழுவினரின் சார்பாக வருகின்ற 08-01-2023 அன்று சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து அதிகாலை 04.00 மணி அளவில் மராத்தான் ஓட்டம் துவங்க உள்ளது. அவ் ஓட்டத்தில் சுமார் 15,000 பேர் வரை கலந்து கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.

 அவ்வாறு ஆரம்பிக்கப்படும் மராத்தான் ஓட்டம் நேப்பியர் பாலத்தில் துவங்கி. திரு.வி.க பாலம். CPT Junction, டைடல் பார்க், துரைப்பாக்கம் வழியாக தாம்பரம் மாநகர காவல் எல்லையான ராஜுவ் நகர் சந்திப்பு வந்தடைந்து அங்கிருந்து சோழிங்கநல்லூர், KK சாலை, அக்கரை ( ECR) பனையூர் வழியாக MGM வந்தடைந்து வலது புறம் திரும்பி இந்திய கடல்சார் பல்கலைகழகம் அருகில் முடிவடைகிறது.

 எனவே வருகின்ற 08-01-2023 ஞாயிறு அன்று அதிகாலை 04.00 மணிமுதல் 09.00 மணி வரை தாம்பரம் மாநகர காவல் எல்லையில் போக்குவரத்தில் கீழ்கண்ட மாற்றங்கள் செய்யப்படுகிறது.

 1.சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து துரைப்பாக்கம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் இடது புறம் திரும்பி செம்மொழிச்சாலை வழியாக செல்ல வேண்டும்.

 2. ராஜுவ் நகர் சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வலதுபுற சாலையில் வேண்டும். செல்ல

 3.மேடவாக்கம் வழியாக சோழிங்கநல்லூர் செல்லும் அனைத்து வாகனங்களும் வேளச்சேரி பிரதான சாலை. பள்ளிக்கரணை வழியாக செல்லவேண்டும்.

 மேலும் இந்நிகழ்விற்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் போக்குவரத்து காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.