சென்னையின் முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்

 
traffic diversion

 

சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டம் 5-வது பகுதியான, புழுதிவாக்கம் முதல் மடிப்பாக்கம் வரை உள்ள பகுதியில் மெட்ரோ ரயில் தூண் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் திங்கள் கிழமை காலை 7 மணி முதல் அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டவுள்ளதாக போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணி நடைபெறும் கட்டத்தில் MRTS கால சாலை வானுவம்பேட்டை சந்திப்பிலிருந்து கீழ்க்கட்டளை நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள், கனரக வாகனங்கள். நான்கு சக்கர இலகுரக வாகனங்கள் (கார் உட்பட) மற்றும் அனைத்து வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை எதும் இன்றி சீராக செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மேற்படி வாகனங்கள் நேராக ஆதம்பாக்கம் MRTS ரயில் நிலைய சந்திப்பிலிருந்து வேளச்சேரி MRTS சாலை. கைவேலி சிக்னல் சந்திப்பில் வலது பக்கம் திரும்பி பழைய மேடவாக்கம் சாலை, ராம் நகர், சபரி நகர் சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு வழியாக ஆக்ஸிஸ் வங்கி வந்தடையலாம். 

Madipakkam

இடைப்பட்ட பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பாலாம்பிகை நகர் சந்திப்பிலிருந்து நேராக செல்லாமல் இடது புறம் திரும்பி எம்.ஆர்.டி.எஸ் சாலை இணைந்து நேராக சென்று கைவேலி சிக்னல்  வந்து சர்வீஸ் சாலை சென்று ஆக்ஸிஸ் வங்கி மேடவாக்கம் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி தாங்கள் செல்ல வேண்டிய கீழ்க்கட்டளை மற்றும் அதற்கு மேல் உள்ள பகுதிகளுக்கு செல்லலாம் ஆனால் எதிர்புறம் சாலையில் கீழ்க்கட்டளையிலிருந்து கிண்டி நோக்கி உள்செல்லும் வாகனங்கள் ஏற்கனவே உள்ள பாதையில் மாற்றம் ஏதும் இன்றி நேராக செல்லலாம் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. போக்குவரத்து மாற்றம் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை dcpsouth.trafic@gmail.com வலைதள முகவரியில் தெரிவிக்கலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது