கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!!

 
ttn

வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில்  சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ttn

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பேரருவி, ஐந்தருவி ,பழைய குற்றாலம் உள்ள அனைத்து அறிவுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆறு நாட்களாக அருவிகளில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர். அருவிகளில் நீர்வரத்தை பொறுத்து சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ttn
இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் வட்ட கானல் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு அருகில் சென்று செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  10 நாட்களாக இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.