#JustIn நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு - ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை!

 
ttn

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

tn

ஒகேனக்கல் அருவி தமிழ்நாட்டின்  காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தருமபுரியில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்குள்ள ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவற்றில் தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வர். இந்த சூழலில் கேரள மாநிலத்தின் சில பகுதிகள் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் காவிரி ஆற்றிற்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

hogenakkal
இந்நிலையில் ஒகேனக்கல் காவரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.  இதனால் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி டெல்டா பாசனத்துக்காக 15,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.