அதிகரிக்கும் தக்காளி விலை - ரூ.100 வரை உயரும் என எச்சரிக்கை

 
tomotto

 சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னை மற்றும் புறநகர் மக்களின் காய்கறி தேவையை போக்கும் முக்கிய மையமாக கோயம்பேடு காய்கறி சந்தை விளங்கி வருகிறது. இங்கிருந்து தான் சென்னை முழுவதும் காய்கறி சப்ளை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தையில், காய்கறி வரத்து அதிகரிக்கும் போது விலை குறைவது, வரத்து குறையும் போது விலை உயருவதும் வழக்கமான ஒன்றுதான். இந்நிலையில், தக்காளி விளைச்சல் குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கிருஸ்னகிரி , தர்மபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட   தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து தக்காளி விளைச்சல் செய்யபட்டு கோயம்பேடு சந்தைக்கு வந்த நிலையில், விளைச்சல் குறைவு காரணமாக வரத்து குறைந்துள்ளது.

tomotto

 .

இதேபோல் ஆந்தரா மாநிலம் மதனபள்ளி ,பலமனேரி, புங்கனூர், கர்நாடக மாநிலம் ஸ்ரீனிவாசபுரம், சிந்தாமணி, கோலார் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் 80 லாரிகள் மூலம் தக்காளி வந்த நிலையில் விளைச்சல பாதிக்கபட்டு தற்போது 40 லாரிகள் மட்டுமே வந்துகொண்டிருக்கிறது, இதன் காரணமாக கடந்த மாதம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காள் இன்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இன்னும் 3 மாதங்கள் வரை நீடிக்கலாம் என்றும் வரும் வாரங்களில் 100 ரூபாய்க்கு விற்பனை ஆகும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.