பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

 
college reopen

பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Anna univ

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்பட்டன.  இதையடுத்து தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை ஜூன் 22 ஆம் தேதி தொடங்கியது. அதேபோல் பொறியியல் படிப்பிற்கு ஜூன் 20ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட வருகின்றன.  இருப்பினும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானதால் 5 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்படும் என  உயர் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

anna univ

இந்நிலையில் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் சேர இன்றுடன் அவகாசம் நிறைவடைகிறது. கலை அறிவியல் படிப்புகளில் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில் 4 லட்சம் மாணவர்கள் விண்ணப்பத்துள்ளனர். பொறியியல் படிப்புகளில் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.  அதன்படி இதுவரை 6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.