பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் இன்று...!!

 
ttn

மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

ttn

மறைந்த முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  காஞ்சிபுரத்தில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணாதுரை சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றதுடன் , பச்சையப்பன் கல்லூரியில் கல்வி கற்றார். பட்டதாரியான இவர் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். 

tn

தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாக  சொற்பொழிவாற்றலும், எழுதவும் வல்லவர் அறிஞர் அண்ணா.  அத்துடன் பல முற்போக்கு சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இருந்தார் .தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் , தன்னுடைய திராவிட சீர்திருத்த கருத்துகளை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே.  ஆரம்ப காலகட்டத்தில் ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் சென்னை அரசியலில் ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார். அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதி கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.  இதையடுத்து பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணாதுரை துவங்கினார். 

tn

இதை தொடர்ந்து பொது தேர்தலில் போட்டியிட்ட அவர் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றார் . ஒரு முதல்வராக மட்டும் இன்றி அறிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் ,மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும் இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார்.