கடைமுக தீர்த்தவாரி -மயிலாடுதுறைக்கு இன்று உள்ளூர் விடுமுறை

 
ம்m

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   கடை முக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்.   இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு கட்டும் வகையில் வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவித்து உத்தரவிட்டார்.

 மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் துலா உற்சவம் நடந்து வருகிறது . இந்த நாளில் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளும் தேவர்களும் காவிரியில் நீராடி தங்களது பாவங்களை போக்கிக் கொண்டதாக ஐதீகம் இருக்கிறது .

ம்ய்

 கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, உள்ளிட்ட புண்ணிய நதிகள் தங்கள் பாவத்தை போக்கிக் கொள்ள மயிலாடுதுறை காவிரி துலா கட்டம் ரிஷப தீர்த்தத்தில் ஐப்பசி மாதம் புனித நீராடுவதாக நம்பப்பட்டு வருகிறது . மேலும் சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவி சாப விமோசனம் பெறுவதற்காக மயில் உருவம் எடுத்து சிவபெருமானை பூஜித்து சாபம் நீங்கிய இடம் மயிலாடுதுறை என்றும் சொல்லப்படுகிறது .  இதனால் இங்கு சிவபெருமானும் மயில் உரு கொண்டு இருவரும் ஆனந்த நடனம் மாயூரம் ஆண்டவன் ஆடியதாக நம்பிக்கை இருக்கிறது.

 அப்போது,  கவுரி ஆகிய நான் மயில் உருவம் கொண்டு பூஜித்ததால் கவுரி மாயூரம் என்று இந்த ஊருக்கு பெயர் வர வேண்டும்.  நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும்.  நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று சிவனிடம் பார்வதி வேண்டியதாக ஐதீகம் உள்ளது.

இந்த ஆண்டு ஐப்பசி 1ஆம் தேதி தொடங்கி துலா உற்சவம் நடைபெற்று வருகிறது.  துலா உற்சவத்தின் முக்கிய விழாவான கடை முக தீர்த்தவாரி இன்று நடைபெறுகிறது .  இதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டார் ஆட்சியர் லலிதா