திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை!!

 
ttn

திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

tn

பொதுவாக மாநிலங்களில் உள்ளூர் மத மற்றும் மொழி சார்ந்த திருவிழாக்கள் உள்ளன.  இதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு விடுமுறை அளிப்பது என்பது வாடிக்கையான ஒன்று.  அந்த வகையில் நத்தம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

local holiday

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நத்தம் மாரியம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.  இதன் காரணமாக இன்று பள்ளி , கல்லூரிகள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அவசர அலுவல் பணிகளை கவனிக்கும் பொருட்டு கருவூலங்கள் சார்பு நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.  அத்துடன் விடுமுறை நாளை ஈடு செய்ய அக்டோபர் ஒன்றாம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.