இந்த மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை!!

 
tn

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

அருளை அள்ளி தரும் ஆடி … இம்மாதத்தின் முக்கிய நாட்கள் இதோ!

ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதம் என்று சொல்வதுண்டு. அந்த அளவுக்கு ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களும் விசேஷமான ஒன்றாக காட்சியளிக்கும். அதேபோல் ஆடி மாதத்தில்தான் அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறும்.  அந்த வகையில் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆடி மாதத்தில் தான் ஆண்டாள் அவதரித்தார். இந்த நாள் திருவாடிப்பூரம் என்று சொல்லப்படுகிறது. ஆடிப்பூரம் நாளில் அம்மன் கோவில்களில் அம்மனுக்கு வளைகாப்பு போன்ற விழா நடத்தி அதை திருமணமான பெண்களுக்கு அளிக்கும்போது குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

local holiday

இந்நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா நடைபெறுவதையொட்டி இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக  ஆகஸ்ட் 13-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார்.  அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு இன்று விருதுநகரில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.