இந்த 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

 
ர்ச்


கனமழையின் காரணமாக திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.   முன்னதாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு  இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி தொடங்கியது.  இதனால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.  சென்னையில் நேற்று அதிகாலையில் இருந்து மிதமான  மழை பெய்தது.   அதன் பின்னர் மாலை 5 மணிக்கு மேல் கன மழை பெய்யத் தொடங்கியது. 

ச்

 சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், சேத்துப்பட்டு, வில்லிவாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் அம்பத்தூர் ,ஆவடி ,அயப்பாக்கம்,அண்ணனூர் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கன மழை பெய்தது.  இன்றைக்கும் இந்த மலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. 

 இதே போல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்  மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் இன்று அம்மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தொடர் கனமழையின் காரணமாக மேலும் தஞ்சாவூர், திருவாரூர் ,மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர்,  மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.