நீலகிரி,வால்பாறையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 
rain school

தொடர் கனமழையின் காரணமாக வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது.

rain

நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 7ஆம் தேதி மற்றும் 8ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain school leave

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக  கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறையில் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது.  கனமழை காரணமாக  வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று  விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சமீரன் அறிவித்துள்ளார். அதேபோல் கனமழையால் நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! அறிவிக்கப்பட்டுள்ளது.