திருவாரூர், தேனியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
schools

திருவாரூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. 

rain

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி , கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம் வால்பாறையில் பள்ளிகளுக்கும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சிறுமலை நீலகிரி மாவட்டத்திலும்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

rain school leave

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரி அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.