இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

 
rain school

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

rain 

அதிகன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ,தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் மேற்கூறிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 

Rain

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.  கமலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரியில் நேற்று நான்கு மணி நேரம் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் நீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.  அத்துடன் கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

rain

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் நான்காம் தேதி வரை அதி கனமழை வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறையின் அறிவிக்கையின்படி 01.08.2022 முதல் 04.08.2022 வரை அதி கனமழை பெய்ய உள்ளதாக (Red Alert) - முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்கவும், மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வெள்ள சேதவிபரங்கள் மற்றும் வெள்ளம் தேங்கிய விபரங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் கட்டணமின்றி செயல்படும் தொலைப்பேசி எண் 1077 மற்றும் 04652 - 231077 - க்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.