சேது சமுத்திர திட்டம் - சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்

 
tn

சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார். 

tn

நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இரண்டாம் நாள் மறைந்த எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மூன்றாம் நாளான நேற்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்வி நேரம் விவாதம் ஆகியவை நடைபெற்றன. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டஒழுங்கு சீரழிந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்ற பட்டியல் தங்களிடம் உள்ளதாக கூறி பல்வேறு விவரங்களை சுட்டிக்காட்டினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் உடனடியாக சட்டப்பேரவிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

tn assembly

இந்நிலையில் இன்று சேது சமுத்திர  திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற சட்டப்பேரவையில் இன்று தனி தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இத்திட்டம் இருக்கும் என்றும் இனியும் இத்திட்டத்தை  நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக இருக்கிறது என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை சட்டப்பேரவையில் இன்று முன்மொழிவு உள்ளார்.