பேனா வைப்பதற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாமே ? பிரேமலதா விஜயகாந்த்

 
premalatha vijayakanth

பெண்மையின் புனிதத்தை  காக்க வேண்டும் என்று  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

premalatha

தாம்பரத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.  இதில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், கேப்டன் நலமாக உள்ளார். கேப்டன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் .எந்த நோக்கத்திற்காக இந்த கட்சி துவங்கப்பட்டது .நிச்சயம் நாம் அதை அடைவோம். நாம் செய்த உதவிகளோ தர்மங்களோ என்றும் வீண் போகாது . எழுதாத பேனாவிற்கு என்பது கோடி ரூபாய் செலவில் சிலை வைப்பதற்கு பதில், மக்களுக்கு  சாலை வசதி குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்யலாமே?  பேனா வைப்பதற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாமே?  தங்க பேனாவை தான் கேப்டன் விஜயகாந்த் ஒரு விழா வைத்து கொடுத்து விட்டாரே, பின் எதற்கு பேனாவை மீண்டும் வைக்கிறார்கள்.

Vijaykanth’s wife Premalatha tested positive for COVID-19

 திமுக ஆட்சிக்கு வந்த ஒரு தேர்தல் வாக்குறுதியும்  நிறைவேற்றாமல் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஆ. ராசா இந்துக்களை பற்றி பேசியது சரியா ?தவறா? எனக் கூறிய கேள்விகளை மீண்டும் யாரிடமும் கேட்காதீர்கள். இந்து சமய அறநிலை துறை அமைச்சரிடம் கேளுங்கள், இல்லையென்றால் துர்கா ஸ்டாலின் , சபரீசன்  போன்றவர்களிடம் கேளுங்கள். அவர்கள் தான் பின் வழியாக சென்று பூஜை குடமுழுக்கு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். கடவுளே இல்லை என்று சொன்னவர்கள் இன்று கடவுள் பின்னாடி செல்கிறார்கள்" என்றார்.

Premalatha

தொடர்ந்து பேசிய அவர்,  புகை , மது உள்ளிட்ட பழக்கங்களில் சம உரிமை வேண்டும் என பெண்கள் ஈடுபடக் கூடாது. புகை ,கஞ்சா , மது உள்ளிட்ட பழக்கத்திற்கு ஆளாவதால் பெண்கள் பாலியல் துன்பத்தில் சிக்குகிறார்கள். ஆண்களுக்கு நிகராக சாதிப்பதில் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் .பெண்மையின் புனிதத்தை காக்க வேண்டும் என்றார்.