தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தினசரி கொரோனா

 
corona

தமிழகத்தில் புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Coronavirus can stay on surfaces of patient rooms, hospital floor, finds  new study | Mint


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து  மக்கள் நல்வாழ்வுத்துறை  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 447 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 75 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 102 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 32 பேருக்கும், கோவையில் 58 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 32 ஆயிரத்து 547 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,039 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 794 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.