திருவள்ளூர்: 5 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை

 
ர்

கனமழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 5  தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   திருவள்ளூர், ஆவடி, பொன்னேரி, பூவிருந்தவல்லி, அம்பத்தூர் ஆகிய ஐந்து தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ர்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்றது.  இதனால் கடந்த மூன்று தினங்களாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.   

 சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினமும் அதற்கு முன்தினமும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.   நேற்று ஒரு தினம் பகல் பொழுதில் மழை இல்லாததால் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின. 

 இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் பெய்த இடி மின்னலுடன் கூடிய கனமழையினால் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகம் மழை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும்  ஐந்து தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  திருவள்ளூர், ஆவடி, பொன்னேரி, பூவிருந்தவல்லி, அம்பத்தூர் ஆகிய ஐந்து தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.