அஜித் ரசிகர் மன்ற அலுவலக பூட்டை உடைத்து 150 துணிவு டிக்கெட்கள் திருட்டு

 
thunivu

வேலூர் மாவட்ட அஜித்குமார் ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தின் பூட்டை உடைத்து துணிவு பட முதல் காட்சி டிக்கெட்டுகள் (150) மற்றும் 16 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Image

வேலூர் காகித பட்டறையில்  வேலூர் மாவட்ட நடிகர் அஜித்குமார் ரசிகர் நற்பணி இயக்க அலுவலகம் உள்ளது. அஜித் ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவராக சுரேஷ்பாபு என்பவர் உள்ளார். இவர் வழக்கம் போல் இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று வந்து பார்த்தபோது. அலுவலகத்தில் பூட்டு உடைக்கப்பட்டு அலுவலக பீரோவில் இருந்த 16,000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் துணிவு படத்தின் 150 ரசிகர் மன்ற காட்சியின் டிக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது. 

துணிவு பட டிக்கெட்டுகள் மற்றும் 16 ஆயிரம் உறக்கம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ், இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வேலூர் வடக்கு போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்திருக்கும் துணிவு மற்றும் விஜய் நடித்திருக்கும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இந்த இரண்டு திரைப்படங்களும் நாளை வெளியிடப்படுகிறது. 2 படங்களின் டிக்கெட் புக்கிங்  ஆன்லைனில் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன. நாளை அதிகாலை 1 மணி, 4 மணி ஆகிய நேரங்களில் படங்கள் திரையிடப்படுகின்றன.