ஒரு மணி நேரத்தில் இந்த 4 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்

 
cr

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

 வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று தொடங்கியது.   தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை வெளுத்து வாங்கியது. சென்னை மாநகரம் இந்த மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையினால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி சென்றது.  இந்த காற்றழுத்தத்தினால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து  கனமழை, அதிக கன மழை பெய்து வருகிறது . டெல்டா மாவட்டங்களில் அதிக கன மழை பெய்தது.   மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதிக கனமழை பெய்து   அம்மாவட்டம் வெள்ளக்காடாக இருக்கிறது.

rn

 வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.   தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும்,  இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மறுதினம் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.   இதனால் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும்,  19ஆம் தேதி முதல் மழை படிப்படியாக தீவிரமடைய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.

இந்நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.